முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"அஜித் சார் தங்கம், ஆனா சூர்யா ரொம்ப கஷ்டம்.." பிரபல இயக்குனரின் அதிர்ச்சி பேட்டி.!

07:30 AM Nov 20, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் சூர்யா மற்றும் அஜித். இவர்கள் இருவரும் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையே நிறைய வேற்றுமை இருக்கிறது. சூர்யா அடிக்கடி ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுவார். மேலும் எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். ஆனால் அஜித் அப்படி இல்லை

Advertisement

சூர்யா அறக்கட்டளை ஆரம்பித்து ஏழை மாணவ மாணவிகளுக்கு அந்த அறக்கட்டளையின் மூலம் உதவி வருகிறார். அஜித்தும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் சூர்யா ஆகியோரை இயக்கிய அனுபவம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இதுகுறித்து பேசி இருக்கும் அவர் மங்காத்தா படத்தை இயக்கும்போது தனக்கு மிகுந்த சுதந்திரம் இருந்ததாகவும் அஜித் இயக்கம் தொடர்பான இந்த விஷயத்திலும் தலையிடவில்லை அதனால் அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ட்ரெய்லரிலும் அஜித் தான் சொன்ன விஷயத்தை பின்பற்றியதால் அது மங்காத்தா படத்தின் வெற்றிக்கு உதவியது எனவும் தெரிவித்திருக்கிறார்.

இவர் சூர்யாவை வைத்து இயக்கிய மாஸ் என்ற மாசிலாமணி திரைப்படம் தோல்வியடைந்தது. இந்தத் திரைப்படத்தின் இயக்கத்தில் சூர்யா தலையிட்டு சில மாற்றங்களை செய்யச் சொன்னதாக தெரிவித்த வெங்கட் பிரபு சூர்யா அடிக்கடி கோபப்படுவார் என்பதால் அவரது விருப்பத்திற்கே செயல்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் ட்ரெய்லரிலும் தான் சொன்ன விஷயத்தை சூர்யா பாலோ செய்யாததால் மாஸ் திரைப்படத்தின் கதை என்னவென்று தெரியாமல் அந்த படம் தோல்வி அடைந்ததாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

Tags :
ajithdirector venkat prabhuSuryavenkat prabhu about ajithஅஜித் சார் தங்கம்இயக்குனர் வெங்கட் பிரபு
Advertisement
Next Article