முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சாலையில் ஜாலியாக உலா வரும் அஜித் - ஷாலினி..!! இணையத்தை வளைத்துப் போட்ட வைரல் வீடியோ..!!

Ajith-Shalini's latest video is going viral on social media.
10:56 AM Oct 07, 2024 IST | Chella
Advertisement

நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோதே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில், அஜித்-ஷாலினியின் சமீபத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர், நடிகைகள் பெரிதும் விரும்புவது சாதாரண மனிதர்கள் போல் சாலையில் ஜாலியாக செல்வது தான். ஆனால், தமிழ்நாட்டில் அது அவர்களுக்கு சாத்தியமில்லாதது என்பதால், வெளிநாட்டிற்கு சென்று அங்கு ஜாலியாக சாலையில் உலா வர விரும்புவார்கள்.

அந்த வகையில், நடிகர் அஜித்தும் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் ஸ்பெயின் நாட்டு சாலையில் ஜாலியாக வாக்கிங் சென்றபோது எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார் ஷாலினி. அந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்திலும், மகிழ்த்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் நடித்து வருகிறார். இதில் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : நிலவையே ஆட்டிப்படைத்த கொரோனா ஊரடங்கு..!! அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா..? விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்..!!

Tags :
அஜித்குமார் - ஷாலினிசமூக வலைதளம்வைரல் வீடியோ
Advertisement
Next Article