For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடடே.! "தல எப்போதுமே தல தான்.." தளபதி மகனுக்கு உதவி கரம் நீட்டிய அஜித்.!

11:58 AM Jan 25, 2024 IST | 1newsnationuser7
அடடே    தல எப்போதுமே தல தான்    தளபதி மகனுக்கு உதவி கரம் நீட்டிய அஜித்
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். வாரிசு நடிகராக அறிமுகமாகி தன்னுடைய அபாரமான திறமையினால் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு கோட் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு யுவன் மற்றும் விஜய் கூட்டணியில் இந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

அமெரிக்காவில் சென்று திரைப்பட இயக்கம் பற்றி படித்து வந்த இவர் லைக்கா நிறுவனத்திற்காக படம் ஒன்றை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. மலையாள திரை உலகின் பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் உட்பட சில முன்னணி இயக்குனர்கள் ஜேசன் சஞ்சயை ஹீரோவாக அறிமுகப்படுத்த தளபதியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். எனினும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தனக்கு இயக்குனராவதில் ஆர்வம் இருப்பதாக கூறி அந்த வாய்ப்புகளை மறுத்தார்.

ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் திரைப்படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகனுக்கு அஜித்குமார் உதவி செய்ததாக ஒரு தகவல் இணையதளத்தில் செய்தியாக பரவி வருகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்திற்கு சுரேஷ் சந்திரா பிஆர்ஓ-வாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் நடிகர் அஜித்குமாரின் திரைப்படங்களுக்கும் பிஆர்ஓ-வாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் திரைப்படத்திற்கு பிஆர்ஓ-வாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அஜித்திடம் இது தொடர்பாக தயக்கத்துடன் பேசியிருக்கிறார் சுரேஷ் சந்திரா. அதனைக் கேட்ட அஜித் சந்தோசமாக விஜய் மகன் படத்தில் பணியாற்றுங்கள் என கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நடிகர் விஜயின் மகனுக்கு மறைமுகமாக அஜித்குமார் செய்த இந்த உதவி சினிமா வட்டாரங்களில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement