For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பிய தல அஜித்" - வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சி தகவல்.!

05:43 PM Mar 10, 2024 IST | Mohisha
 மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பிய தல அஜித்    வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சி தகவல்
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் தற்போது மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

காது வழியாக மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அந்த பாதிப்பு சரி செய்யப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பரவி வந்தது. தல அஜித் குமாருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் அதனை அகற்றுவதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது போன்ற செய்திகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் ஓய்விற்கு பின் மீண்டும் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார் அஜித்குமார். தனது மகனின் பள்ளி விழாவிலும் அவர் கலந்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வலைப்பேச்சு அந்தணன் அஜித் குமார் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ஏனெனில் அஜித் குமாருக்கு இருந்தது போன்ற பாதிப்பு பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை பாரதி பாஸ்கர் சரியாக கவனிக்காமல் பட்டிமன்றம் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின்பு தான் இந்த பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதன் பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்டு பல நாட்கள் ஓய்வு மற்றும் சிறப்பு பயிற்சிகளுக்குப் பிறகு அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியிருப்பதாக அந்தணன் தெரிவித்துள்ளார். ஆனால் அஜித் குமார் இந்த பாதிப்பை முன்னரே கண்டறிந்ததால் அவருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது எனவும் தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார்.

Read More: PM MODI | பிரார்த்தனை முடிந்த பின் திரிசூலத்தை கையில் எடுத்து பொது மக்களை வாழ்த்திய பிரதமர் மோடி.!

Advertisement