For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரஜினியின் வீட்டில் தனுஷின் பெற்றோரை அவமானப்படுத்திய ஐஸ்வர்யா..? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

10:08 AM Dec 15, 2023 IST | 1newsnationuser6
ரஜினியின் வீட்டில் தனுஷின் பெற்றோரை அவமானப்படுத்திய ஐஸ்வர்யா    வெளிச்சத்திற்கு வந்த உண்மை
Advertisement

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் தனுஷ். இந்த தம்பதிகளுக்கு தற்போது லிங்கா - யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் மிகவும் ஒற்றுமையான தம்பதியாக வாழ்ந்து வந்த இவர்கள், திடீரென கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

Advertisement

இவர்கள் இருவருமே தற்போது வரை விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாத நிலையில், குழந்தைகளுக்காக இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தங்களுடைய கருத்து வேறுபாடுகளை கைவிட்டு, பிள்ளைகளுக்காக மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என்றும், அடுத்தாண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணைவார்கள் எனவும் அவரது நட்பு வட்டாரம் தெரிவித்தது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அதன்படி, அவர் கூறுகையில், 'தனுஷின் பெற்றோர் ரஜினியின் வீட்டுக்கு சென்றபோது ஒருவகையில் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அது நடந்திருக்கலாம். அது தனுஷுக்கு தெரியவந்தது. தனுஷ் தனது குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர். ஒரு இடத்தில் தனது தாயோ, தந்தையோ கண்ணியமாக நடத்தப்படாவிட்டால் கோபம் வரும்.

இந்த விஷயம் தனுஷ் ஐஸ்வர்யாவுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தியது. மேலும் தனது தாய், தந்தையையா அவமானப்படுத்துகிறீர்கள் என்ற ஆவேசத்தில்தான் போயஸ் கார்டனில் ஒரு மாளிகையையே தனுஷ் கட்டியிருக்கிறார்' என்றார்.

Tags :
Advertisement