Breaking: ஏர்டெல் நிறுவனம் தொலைபேசி கட்டணம் உயர்த்துவதாக அறிவிப்பு...!
ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் தொலைபேசி கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிப்பு.
பார்தி ஏர்டெல் நிறுவனம் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 சதவீதம்-21 சதவீதம் உயர்த்தி உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மொபைல் கட்டணங்களில் 12-27 சதவீத உயர்வை நேற்று அறிவித்தது. இது இரண்டரை ஆண்டுகளில் முதல் முறையாகும்.
வரம்பற்ற குரல் திட்டங்களில், ஏர்டெல் கட்டணத்தை ரூ.179ல் இருந்து ரூ.199 ஆகவும், ரூ.455ல் இருந்து ரூ.599 ஆகவும், ரூ.1,799ல் இருந்து ரூ.1,999 ஆகவும் உயர்த்தியுள்ளதாக நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் ஆண்டு கட்டணத்தை பொறுத்தவரை 365 நாள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.2,999 பிளான் ரூ.3,599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 24 ஜிபியுடன் 336 நாள் வேலிடிட்டி வழங்கும் ரூ.1,559 பிளான் ரூ.1,899 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.