Pollution Alert!… வீட்டில் இருந்தே வேலை செய்ய ஊழியர்களுக்கு வேண்டுகோள்!… பாங்காக் நகர நிர்வாகம்!
Pollution Alert: தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காகில் வாகனத்தினால் ஏற்படும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் விவசாய பொருட்களை எரிப்பதன் மூலம் ஏற்படும் புகை ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து, அந்நாடு முழுவதையும் பாதிப்புக்குள் உள்ளாகியது.
அதிகரித்து வரும் மாசுபாட்டின் காரணமாக அந்நாட்டில் சுமார் 60,000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளானதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. பாங்காங்கில் உள்ள 50 மாவட்டங்களில் சுமார் 20 மாவட்டங்களில் PM 2.5 துகள்களின் பாதுகாப்பற்ற அளவுகள் பதிவாகியுள்ளன. அத்துகள்கள் மனித இரத்த ஓட்டத்தில் நுழைந்து உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் அபாயம் கொண்டிருப்பதால் அவை ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
வீட்டிலிருந்தே பணிபுரிய மக்களை ஊக்குவிப்பதால் மாசுபாட்டின் தீவிரத்தை கட்டுப்படுத்த இயலும்”. மேலும் பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அவசியத்தை தவிர வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” என்று பாங்காங் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விமான கண்காணிப்பு நிறுவனமான IQAir கூற்றுபடி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் பாங்காக் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. IQAir இன் கூற்றுப்படி, காற்றில் அதிக அளவு மாசுபாட்டின் பாதகமான விளைவுகள் உடல்நலக் கவலைகளை எழுப்பக்கூடும். மிகவும் ஆபத்தானது, PM2.5 துகள்கள் இரத்த ஓட்டத்தில் நுழையலாம். உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர வழிகாட்டுதலை விட 15 மடங்கு அதிகமாகும் என்று தெரிவித்துள்ளது.
English summary
Bangkok declares emergency, Urges work from home as alarming level of pollution suffocates the city.
Read More: புற்றுநோய் தடுப்பு மருந்துகள் உருவாக்கம்..! ரஷ்யா அதிபர் புதின் முக்கிய அறிவிப்பு..!