For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடி தூள்..!! சூப்பர் சலுகையை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!! இனி நீங்களும் விமானத்தில் பயணிக்கலாம்..!! டிக்கெட் இவ்வளவு தானா..?

Air India Express has announced some offers for its passengers.
10:42 AM Jan 13, 2025 IST | Chella
அடி தூள்     சூப்பர் சலுகையை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்     இனி நீங்களும் விமானத்தில் பயணிக்கலாம்     டிக்கெட் இவ்வளவு தானா
Advertisement

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான பயணிகளுக்காக சில சலுகைகளை அறிவித்துள்ளது.

Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் 'ஃபிளாஷ் சேல்' என்ற சிறப்பு டிக்கெட் விற்பனையை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், விமான டிக்கெட் கட்டணம் ரூ.1,498ல் தொடங்குகிறது. இந்த சிறப்பு சலுகை இன்றுடன் கடைசி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 'ஃபிளாஷ் சேல்' சிறப்பு சலுகையில் உள்நாட்டில் பயணிக்கும் விமானங்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்தச் சலுகையின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் இணையதளம், மொபைல் செயலி ஆகியவற்றின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் 'எக்ஸ்பிரஸ் லைட்' என்ற சலுகை மூலம் கூடுதல் கட்டண குறைப்பும் கிடைக்கும்.

இதன் மூலம் குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். மேலும், வழக்கத்தை விட உங்கள் லக்கேஜ்களை 3 கிலோ வரை அதிகமாக எடுத்துச் செல்லலாம். இதற்கு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் லாயல்டி உறுப்பினர்களாகும் நபர்களுக்கு கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக, லாயல்டி உறுப்பினர்களுக்கு சூடான உணவுகள், ஜன்னல் இருக்கைகள் ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கப்படும்.

Read More : ”புருஷன் நான் இருக்கும்போது வேற ஒருத்தவன் கூட”..!! செருப்பால் அடித்த மனைவி..!! பதிலுக்கு கத்தியை எடுத்து சொருகிய கணவன்..!!

Tags :
Advertisement