முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம் : நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

11:00 AM May 08, 2024 IST | Mari Thangam
Advertisement

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்தாண்டு அவர்களின் வேலை நிறுத்தத்தால் விமான சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் முன்னறிவிப்பின்றி இன்று அதிகாலை முதல் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஏர் இந்தியா விமான சேவைகள் திடீரென முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு- டெல்லி, கோழிக்கோடு- துபாய் குவைத்- தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா கண்ணூரில் இருந்து தனது விமானங்களை ரத்து செய்தது. அதன்படி, கண்ணூரில் இருந்து மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. கொச்சி விமான நிலையத்தில் இருந்து நான்கு சேவைகள் நிறுத்தப்பட்டன.

அறிக்கைகளின்படி, திருவனந்தபுரம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் இருந்து சுமார் 70 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கச் சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தாலும், அதன் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தான் ரத்து செய்ய வழிவகுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதன் காரணமாக விமான பயணிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை விரைவாக செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Air IndiaAir India employees protestAirline services affected
Advertisement
Next Article