ஆ.ராசாவின் காரை சோதனை செய்ததால் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட்..? மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச்சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மலை மாவட்டமான நீலகிரியிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும்படையினர் சோதனை செய்தனர். அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா என்பவர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக பரிசோதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் புகாரளித்தனர்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. விசாரணையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா, முறையாக வாகனப் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று அவரை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
Read More : விசிக-வுக்கு ’பானை’ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!! திருமாவளவன் ஹேப்பி..!!