முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளின் புகைப்படங்கள் வெளியீடு!

01:05 PM Apr 14, 2024 IST | Mari Thangam
Advertisement

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளின் படங்களை மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Advertisement

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.1977.8 கோடி மதிப்பீட்டில் ஜெய்கா என்ற ஜப்பானிய நிதி நிறுவனத்துடன் 2021ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. மொத்த மதிப்பீட்டில் 82% சதவீத தொகை, அதாவது ரூ.1627.70 கோடியை ஜெய்கா நிறுவனம் கடனாக வழங்கும். எஞ்சிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

5 ஆண்டுகளை கடந்தும் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனைதொடர்ந்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனமான L&T நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில், கட்டுமானப் பணிகள் நடைபெறும் புகைப்படங்களை, மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அதன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. 950 படுக்கைளுடன், பத்து தளங்களுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக உள்ளது. முதல் கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில், 5 கி.மீ. சுற்றளவுக்கு 12 அடி உயர காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை பகுதியில் ரூ.21 கோடியில், 6 கிலோ மீட்டர் சாலை போடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

Tags :
Madurai AIIMSPM Modi
Advertisement
Next Article