முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இனி செங்கோட்டையன் தலைமையில் தான் அதிமுக’..!! ’எடப்பாடி அவ்வளவு தான்’..!! பரபரப்பை கிளப்பிய அமைச்சர்..!!

05:29 PM May 14, 2024 IST | Chella
Advertisement

தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்குள் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று திமுக அமைச்சர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே, அதிமுகவில் ஒருவித சலசலப்புகள் இருந்து வந்தது. இந்த சூழலில், விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "விஜயதாரணி மட்டும் இல்லாமல், மேலும் பல முக்கிய புள்ளிகள் பாஜகவுக்கு வருகிறார்கள்" என்றார். இதனால், அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு செல்ல போவது யார் என்ற ஆர்வம் அதிகமானது. ஆனால் அண்ணாமலை சொன்னதுபோல, யாருமே பாஜகவில் இணையவில்லை.

மேலும், அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன், பாஜகவில் இணைவதாக செய்தி பரவியது. இதற்கு அப்போதே அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். அப்போதும் இந்த புகைச்சல் ஓயவில்லை. நேற்று முன்தினம், திமுக அமைச்சர ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்ல போகிறதா, வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா என்பது தெரியும். அதிமுகவில் பாஜக பிளவை ஏற்படுத்தும்.

எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், செங்கோட்டையன் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது. அதனால் அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. அதனை நாங்கள் செய்ய மாட்டோம், ஆனால் பாஜக நிச்சயம் செய்யும்" என்று கூறி பரபரப்பை கிளப்பினார். அமைச்சரின் இந்த கருத்துக்கு மீண்டும் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். இது மாற்றுக்கட்சியை சார்ந்தவர்களுக்கும் தெரியும்.‌ சட்ட அமைச்சர் என்னை குறித்து கூறிய கருத்து வருந்தத்தக்க ஒன்று. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிந்து புரிந்து, இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை மற்றவரை கூட அரசியல் வாழ்க்கையில் குறை கூறாமல் என் வாழ்க்கை பயணத்தில் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். அதிமுக தொண்டர்களுக்கு என்றைக்குமே நான் தூணாக நின்று செயலாற்றி இருக்கிறேன் என தெளிவுபடுத்துகிறேன்" என்றார்.

Read More : நாடே எதிர்பார்ப்பு..!! ஒரே மேடையில் விவாதிக்கும் மோடி, ராகுல்..? இந்து ராம் எழுதிய கடிதத்தின் பின்னணி..!!

Advertisement
Next Article