முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிமுக அதிர்ச்சி..!! MLA பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீர் உடல்நலக்குறைவு..!! மருத்துவமனையில் சிகிச்சை..!!

11:19 AM Apr 16, 2024 IST | Chella
Advertisement

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ-வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தீவிர பரப்புரை மேற்கொண்ட அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Read More : ரூ.84,000 கோடி சொத்து..!! ஆடம்பர பங்களா..!! யார் இந்த பணக்கார பெண்..? வியப்பூட்டும் தகவல்கள்..!!

Advertisement
Next Article