எடப்பாடி முன்னிலையில் காலை 10:35 மணிக்கு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம்...!
நீதிமன்றப் போராட்டங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி, தனது முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை இன்று நடத்த உள்ளார். கூட்டணியை உறுதிப்படுத்தவும், தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பேரவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறுகிறது. இதே இடத்தில்தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இரண்டு எம்எல்ஏக்கள் பொதுக்குழு கூட்டத்தில் வெளியேற்றப்பட்டபோது நடக்கக் கூடாத பல நிகழ்வுகள் நடந்தன.
தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது செல்லும் என நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. 2024 லோக்சபா தேர்தலை, பா.ஜ.க, இல்லாத மெகா கூட்டணி அமைத்து சந்திப்போம் என ஏற்கனவே அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. “NDA மற்றும் பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்வதற்கான எங்கள் முடிவு இறுதியானது மற்றும் மறுபரிசீலனை இல்லை கட்சித் தலைவர்கள் உறுதியாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் போது கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது யாருடன் கூட்டணி அமைப்பதை போன்று முக்கிய தீர்மானங்கள், விவாதங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டைத் தலைமை நீதிமன்ற உத்தரவுகளின் மூலமாக முடிவுக்கு வந்த நிலையில், இன்றைய பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.