ஐடி நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் AI..!! இனி புது ஊழியர்களை வேலைக்கு எடுக்க மாட்டோம்..!! அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட Salesforce..!!
உலகளவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்களில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எனப்படும் ஏஐ அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தான், சேல்ஸ் போர்ஸ் (Salesforce) நிறுவனம், நடப்பாண்டில் தங்கள் நிறுவனம் மென்பொருள் பொறியாளர்களை புதிதாக வேலைக்கு அமர்த்தப் போவதில்லை என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சேல்ஸ் போர்ஸ் என்பது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமை இடமாக கொண்டு இயக்கி வரும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் பாட்காஸ்ட் பேசுகையில், ”தங்கள் நிறுவனம் உருவாக்கி இருக்கும் ஏஜென்ட் ஃபோர்ஸ் (Agentforce) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியுள்ளார். தற்போது தங்கள் நிறுவனத்தின் கவனம் முழுவதும் அதை மேம்படுத்துவதில் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தாண்டில் தங்கள் நிறுவனம் எந்தெவொரு மென்பொருள் பொறியாளரையும் பணிக்கு எடுக்காது. தங்கள் நிறுவனத்தில் சப்போர்ட் இன்ஜினியர் பணியில் இருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை குறைத்து, இனி சேல்ஸ் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது 1,000ஆக இருக்கக்கூடிய சேல்ஸ் பிரிவு ஊழியர்களின் எண்ணிக்கை விரைவில் 2,000ஆக உயரும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து சேல்ஸ் போர்ஸ் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரி அருந்ததி பட்டாச்சாரியா அளித்துள்ள பேட்டி ஒன்றில், ”தங்கள் நிறுவனத்தில் ஏஐ-யின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இதனால், உங்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் என அஞ்ச வேண்டாம். உங்களுடைய வேலை நிலையில் மட்டுமே மாற்றம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.