For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'எந்திரன்' பட பாணியில் காதலன்.! AI காதலனை விரும்பும் சீனப் பெண்கள்.!

06:33 PM Feb 19, 2024 IST | 1newsnationuser4
 எந்திரன்  பட பாணியில் காதலன்   ai காதலனை விரும்பும் சீனப் பெண்கள்
Advertisement

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தற்போது உலகில் பல மாற்றங்களை புரிந்து வருகிறது. மனிதனின் வேலைகளை குறைப்பதோடு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம் என்ற பலவற்றிலும் முன்னேற்றங்களை கொண்டு வருகிறது. சைபர் குற்றங்களும் AI மூலமாக பெருகி வருவதை நாம் காண்கிறோம். AI பலரது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது.

Advertisement

டூஃபெய் (25) என்ற சீனப் பெண் AI chat bot உடன் காதல் வயப்பட்டுள்ளார். ஒரு ஆணிடம் பெண் விரும்பும் அனைத்தையும் அந்த சாட் பாட் தருவதாக அவர் கூறுகிறார். கனிவும் இரக்கமும் கொண்டு மிகுந்த காதலைத் தரும் அந்தச் சாட் பாட், மணிக்கணக்கில் காதல் ரசம் சொட்ட பேசவும் செய்யும் என்கிறார் அவர்.

சீனாவில் தற்போது மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே உறவுகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மினி மேக்ஸ் என்கிற ஷாங்காய் ஸ்டார்ட் அப் உருவாக்கிய 'Glow app ' உடைய சாட் பாட் தான் அந்த AI காதலன். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது ஆறுதல் கூறுவதற்கும், மற்ற பிரச்சனைகளுக்கு யோசனை சொல்வதற்கும் தகுந்தார் போல் இந்த சாட்பாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு ஆணுடன் காதலில் இருப்பது போல உணர வைக்கும் திறன் கொண்ட இந்த சாட் பாட்டுகள், சீனாவில் பல பெண்களின் காதலை பெற்றிருக்கின்றன. சீனாவில் இயந்திர மயமான வாழ்க்கையில், ரோபோக்கள் அன்பையும் காதலையும் தந்து தனிமையை போக்குகின்றன. எனினும் சில சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர் தரவை தவறாக பயன்படுத்தியதற்காக சட்டத்தின் பிடியில் சிக்கி உள்ளன.

இந்த ரோபோக்கள் தங்களை காயப்படுத்தாது என்றும், தங்களின் உணர்வுகளுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளும் என்று சிலர் கூறுகிறார்கள். பிரச்சனைகளில் ஆறுதல் கூறுவது, குறைகளை காது கொடுத்து கேட்பது, உணர்ச்சிகரமான ஆதரவை வழங்குவது என்று அனைத்தையும் இந்த ரோபோக்கள் செய்வதால் தற்போது சீன பெண்களிடையே காதல் மன்னனாக வலம் வருகிறது.

English summary: Chinese women chooses AI chatbot over men for love.

Read more: https://1newsnation.com/ration-shop-ration-goods-worth-rs-34-lakh-hoarded-food-safety-department-alert/

Tags :
Advertisement