For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆஹா!. மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் வந்தாச்சு!. அம்சங்கள் இதோ!. ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியாச்சு!.

05:30 AM Dec 09, 2024 IST | Kokila
ஆஹா   மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் வந்தாச்சு   அம்சங்கள் இதோ   ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியாச்சு
Advertisement

'Mirai Ningen Sentakuk': பல துறைகளில் ஏஐ புகுத்தப்பட்டு வரப்படுகிறது. நவீனங்கள் ஒவ்வொன்றாக புகுத்தப்படும் போதெல்லாம் முந்தைய தலைமுறையினர் அதிர்ச்சியடைவது இயல்பு. முதன்முதலாக தட்டச்சு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது எழுத்தர்கள் அதிர்ச்சியடைந்தனர், தட்டச்சு செய்ய கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது தட்டச்சர்களும் அதிர்ச்சியடைந்தனர். இப்படி அனைத்து துறைகளிலும் நுழைந்த ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்தியா போன்ற நாடுகளில் அரசு துறைகளில் 84 சதவிகிதம் வரை வேலை வாய்ப்புகள் பறிபோகும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளன.

Advertisement

இந்தநிலையில், துணி துவைக்கும் இயந்திரம் போல, 15 நமிடங்களில் மனிதர்களை சுத்தப்படுத்தக்கூடிய வாஷிங் மெஷினை ஜப்பான் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஜப்பான் ஒசாகாவை தளமாகக் கொண்ட அறிவியல் நிறுவனமான சயின்ஸ் கோ, மனிதர்களை சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் உருவாக்கியுள்ளது. இயந்திரத்தில் ஏறி படுத்துக் கொண்டால் போதும்; 15 நிமிடங்களில் ஆட்களை சுத்தப்படுத்தி விடும் இந்த இயந்திரம். ஜப்பானிய நிறுவனமான சயின்ஸ் கோ இதை கண்டுபிடித்து, அதற்கு 'மிரைய் நிங்கன் சென்டாகுக்' என பெயர் வைத்துள்ளது.

https://twitter.com/MarioNawfal/status/1863839198609870945?

இந்த குறித்து நிறுவனம் கூறியதாவது, மேம்பட்ட தண்ணீர் பீய்ச்சும் ஜெட் மற்றும் நுண்ணிய காற்று குமிழ்கள் ஆகியவற்றைக் கொண்ட ஸ்பா போன்ற அனுபவத்தை இந்த இயந்திரம் தரும். இதை பயன்படுத்துபவர்களுக்கு அமைதியான அனுபவம் கிடைக்கும். வெதுவெதுப்பான நீரில் பாதியளவு நிரம்பிய ஒரு வெளிப்படையான ஜெட் விமானம் போன்ற அமைப்புக்குள் நுழையும் போது, அதில் இருந்து வரும் அதிவேகமான நீரில் நுண்ணிய குமிழ்கள் வந்து, அவை உங்கள் உடல் மீது பரவி, அசுத்துங்களை அகற்றும்.

ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் உதவியால், துவைக்கப்படுபவர் உடல் அறிகுறிகளைக் கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில், தண்ணீர் பீய்ச்சும் பம்ப்பின் அழுத்தம், தண்ணீரின் வெப்பம் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நவீனமயமாக்கப்பட்ட இயந்திரம், ஒசாகா எக்ஸ்போ -2025ல் அறிமுகமாகிறது. கண்காட்சியில் 1,000 பேர் பங்கேற்று அதை நேரடியாக அனுபவிக்க இருக்கின்றனர்.

அதற்கான சோதனையை தீவிரமாக செய்து மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். இது வாடிக்கையாளர் மத்தியில் புதிய புரட்சியை ஏற்படும் என உறுதியாக நம்புகிறோம். இந்த இயந்திரத்தை வாங்குவதற்கான முன்பதிவு இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Readmore: உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ பாயில் படுத்து தூங்குங்க..

Tags :
Advertisement