ஆஹா!. பேருந்தில் சில்லறை வாங்க மறந்துவிட்டீர்களா?. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!. புதிய வசதி!
TN GOVT: பேருந்துகளில் பயண கட்டணம் போக மீதி சில்லறை வாங்க மறந்து விடுவோம் அத்தகைய சூழலில் யுபிஐ வசதி மற்றும் இலவச தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு மீதி சில்லறையை திரும்ப பெறும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
பேருந்துகளில் சில்லறை பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், இதனால் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. இந்த சூழலில் தான் தினமும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு தமிழக அரசு நல்ல செய்தி கூறியிருக்கிறது. தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி என எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரசு பேருந்துகளில் இந்த சில்லறை பிரச்சனை மட்டும் தீர்ந்தபாடே இல்லை. மொபைல் செயலில் பணம் செலுத்தும் இன்றை காலத்திற்கு ஏற்ப பலரது பர்ஸ்களில் நோட்டுகளுக்கு பதிலாக வங்கிகளின் டெபிட் கார்டுகள் தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. இந்தநிலையில்தான் காலத்துக்கு ஏற்ப மாற்றங்கள் உருவாகி வரும் நிலையில், பயணிகள் தங்கள் பயணச்சீட்டுக்கு தேவையான பணத்தை யுபிஐ மூலம் செலுத்தும் வகையில் தமிழக அரசு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் சில நேரங்களில் பேருந்துகளில் பயண கட்டணம் போக மீதி சில்லறை வாங்க மறந்து விடுவோம். அத்தகைய சூழலில் யுபிஐ வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதற்கு நீங்கள் 18005991500 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் பயணச்சீட்டு தொடர்பான விவரங்களை தெரிவித்து ஜி பே, போன்பே போன்ற யுபிஐ செயலியை பயன்படுத்தி மீதி சில்லறையை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
Readmore: யூரோ 2024!. நெதர்லாந்தை வீழ்த்தி அபாரம்!. இறுதிப்போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்ளும் இங்கிலாந்து!