ஆஹா!. ஒரு நிமிடத்தில் 3D இமேஜ்!. வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்!. எப்படி பயன்படுத்துவது!.
WhatsApp: வாட்ஸ் அப் அவ்வப்போது, அதன் பயன்பாடுகளில் பல்வேறு அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. வாட்ஸ் அப் செயலியானது, முதன்மை நோக்கமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு பயன்படுகிறது. மேலும் வாட்ஸ் அப் கால் மற்றும் வாட்ஸ் அப் வீடியோ கால் செய்வதற்கும் பயன்படுகிறது. இதையடுத்து, வாட்ஸ் அப் மூலமாக பணம் அனுப்பும் வகையிலான வசதிகளும் கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில், தற்போது மெட்டா AI , செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடும் வந்துள்ளது. இந்த மெட்டா AI மூலம் , நீங்கள் பல்வேறு வகையான கேள்விகளுக்கும் பதில் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஏதேனும் உங்களுக்கு கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் என்றால், வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள், அதில் உங்கள் கேள்விகளை டைப் செய்யுங்கள். உடனே , உங்களுக்கு பதில் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, உங்களுக்கு முப்பரிமாண படங்கள் தேவைப்படுகிறதா, அதையும் வழங்க தயாராக இருக்கிறது மெட்டா AI. மிக எளிமையாக, அதுவும் மிக விரைவாக 3டி புகைப்படங்களை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு முதலில், உங்களது வாட்ஸ் அப்பில் உள்ள Meta AI என்ற சேட் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
அதில் உங்களுக்கு வேண்டிய 3டி புகைப்படங்களை டைப் செய்யுங்கள்.
உதாரணத்திற்கு create 3d lion image என்று டைப் செய்யுங்கள்.
இதையடுத்து, உங்களுக்கு முப்பரிமாண சிங்கத்தின் புகைப்படம் வந்துவிடும். இதுபோன்று, எளிமையாக கிடைக்கக்கூடிய பயன்பாடுகளை பார்த்து, உபயோகித்து பயன்பெறுங்கள்.