For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாய கடன் தள்ளுபடி..!! பெண்களுக்கு ரூ.1 லட்சம்..!! நெல்லையில் ராகுல் காந்தி மாஸ் அறிவிப்பு..!!

05:24 PM Apr 12, 2024 IST | Chella
விவசாய கடன் தள்ளுபடி     பெண்களுக்கு ரூ 1 லட்சம்     நெல்லையில் ராகுல் காந்தி மாஸ் அறிவிப்பு
Advertisement

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

Advertisement

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ”மீனவர் பிரச்சனை, விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர மறுத்துவிட்டார். வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி தர திட்டமிட்டுள்ளோம்.

தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞருக்கும் ரூ. 1 லட்சம் நிதி உதவியுடன் பறிற்சி தர திட்டமிட்டுள்ளோம். காலியாகவுள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை உடனே நிரப்புவோம். வேலையில்லாத டிப்ளமோ, பொறியியல், பட்டதாரிகளுக்காக வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம் நிறைவேற்றுவோம். தேர்தல் ஆணையர்களை பிரதமர் தான் தேர்வு செய்கிறார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு பெரும் பிரச்சனையாக நீடித்து வருகிறது.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு வேண்டுமா என்பதை மாநில அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றுவோம். நாங்கள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய விரும்புகிறோம். வறுமையில் உள்ள குடும்ப பெண் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்தியாவில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பான திட்டத்தை இந்தியா கூட்டணி வைத்துள்ளது.

அரசு வேலைகளில் 50 சதவீத பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். நாட்டின் மீனவர்களை பிரதமர் மோடி முழுமையாக மறந்துவிட்டார். விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ, மீனவர்களும் நாட்டுக்கு மிகவும் முக்கியம். மீனவர்களின் படகுகளுக்கு டீசல், காப்பீடு, கடன் அட்டை உள்ளிட்டவை வழங்கப்படும். தமிழ்நாட்டு மக்களோடு காங்கிரஸ் என்றும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.

Read More : பெண்களே செம குட் நியூஸ்..!! வரும் 15ஆம் தேதி உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.1,000 வந்துவிடும்..!!

Advertisement