Farmers : ஆண்டுக்கு 7 சதவீத குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயக் கடன்..! மத்திய அரசு சூப்பர் நியூஸ்...!
மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் துறைக்கு நிறுவன கடன்களை அதிகளவில் வழங்கியுள்ளது. வங்கிகள் இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் ரூ.20.39 லட்சம் கோடியை வழங்கியுள்ளன. இது 2013-14 முழுவதும் ரூ.7.3 லட்சம் கோடியாக இருந்தது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வேளாண் கடன் இலக்கை ரூ.20 லட்சம் கோடியாக அரசு நிர்ணயித்தது. வங்கிகள் ஏற்கனவே இலக்கை கடந்துள்ளன, இந்த எண்ணிக்கை இந்த நிதியாண்டில் ரூ.22 லட்சம் கோடியைத் தாண்டக்கூடும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீத குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயக் கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய வேளாண் அமைச்சகம் ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க் கடன்களுக்கான வட்டி மானியத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த திட்டம் வங்கிகளுக்கு அவற்றின் வளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆண்டுக்கு 2 சதவீத வட்டி மானியத்தை வழங்குகிறது. மேலும், கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக 3 விழுக்காடு ஊக்கத்தொகை வழங்கப்படுவதால், வட்டி விகிதம் 4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. "வேளாண் துறைக்கான நிறுவனக் கடன் 2013-14 ஆம் ஆண்டில் ரூ.7.3 லட்சம் கோடியிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் (ஜனவரி 31, 2024 வரை) 1,268.51 லட்சம் கணக்குகளுக்கு ரூ.20.39 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்..
English Summary: Agricultural loan at low interest rate of 7 percent per annum