அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய தகவல்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளிநாட்டு பயணத்திற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியது. இன்றைய கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ”முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 24,700 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. வாகன தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் புதுப்பிக்கதக்க எரிசக்தி, பேட்டரி தயாரிப்பு ஆகிய தொழில்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஈரோட்டில் மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.1,770 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரியில் கிரீன் டெக் ரூ.1,779 கோடி முதலீட்டு திட்டம் உருவாக்கம். அதேபோல், காஞ்சிபுரத்தில் மதர்ஸ் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2,200 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 17ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம்படுகையில் ரூ.206 கோடியில் கட்டப்பட்ட தொழிலாளர்களுக்கான தங்கும் இட கட்டடம் திறக்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக 18,000 படுக்கை வசதியுடன் தொழிலாளர்களுக்கு தங்கும் இடம் வசதி செய்து தரப்படும்” என்று கூறியுள்ளார்.
Read More : ஜியோவின் அதிரடி அறிவிப்பு..!! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!! என்ன தெரியுமா..?!