"Agniban" ராக்கெட் திடீர் நிறுத்தம்!… ஏன் தெரியுமா?
Agniban: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்னிபான் ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் இருந்து முதன் முறையாக 'ஐ.ஐ.டி-மெட்ராஸ்- இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட்-அப்' தயாரித்த 'அக்னிபான்' ராக்கெட் நாளை காலை 9 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்னிபான் ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப கோளாறு சீரான பிறகு, விண்ணில் ஏவப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைகோள் எதுவும் இன்றி சோதனை முயற்சியாக இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: இந்தியாவை உளவு பார்க்கும் சீனா