நாளைமுதல் “அக்னி நட்சத்திரம்” தொடக்கம்!... வெயில் கோர தாண்டவம் ஆடும் மாவட்டங்கள் லிஸ்ட்!
05:38 AM May 03, 2024 IST
|
Kokila
Advertisement
"Agni Nakshatram" பொதுவாக அக்னி நட்சத்திரம் சமயத்தில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் ஏப்ரல் கடைசியிலும் தற்போது இந்த மாத துவக்கத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கமும் வெப்ப அலையும் பொதுமக்களை விழி பிதுங்க வைக்கிறது.
குறிப்பாக சேலம், ஈரோடு, திருச்சி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், கரூர், திருத்தணி போன்ற மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சில நேரங்களில் 110 டிகிரி வரை பதிவாகி வருகிறது. இதேபோல், குளுமையான மலை பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானலில் கூட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது இயற்கையின் கோர தாண்டவத்தை உணர்த்துகிறது.
இந்தநிலையில், நாளைமுதல் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21-இல் தொடங்கி வைகாசி 15-ல் முடிவடையும். அதேபோல் இந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நாட்களில் வெயில் அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருச்சி, திருப்பூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட ஒன்பது டிகிரி பாரன்ஹீட் வரைபடம் அதிகரிக்கும் எனவும் சில இடங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகலாம் எனவும் எச்சரித்துள்ளது மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் இயல்பை விட வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: Congress: பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது…! காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை…!
Advertisement
Next Article