For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று முதல் 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம்..!! குழந்தைகள், கர்ப்பிணிகள் முதியவர்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்..!

05:30 AM May 04, 2024 IST | Kathir
இன்று முதல் 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம்     குழந்தைகள்  கர்ப்பிணிகள் முதியவர்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்
Advertisement

கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.

Advertisement

தமிழ்நாட்டில் எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு வெயில் உச்சத்தில் உள்ளது. ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் வெப்பநிலை உச்சக்கட்டத்தில் இருக்கும். தற்போதைய நிலவரப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில், இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி உள்ளது. இன்று(மே 04) தொடங்கிய அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் அதாவது மே 28 ஆம் தேதி வரை நீடிக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் வெப்பநிலை கொளுத்தும் நிலையில், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் குறிப்பாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கருவுற்ற பெண்கள், முதியவர்கள் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள் என்பதால், தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவித்தப்பட்டுள்ளனர். திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கி இருக்கும் நிலையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருச்சி, திருப்பூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும் இரு தினங்களுக்கு முன் வேலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததுள்ளது அதேபோல் நேற்றைய தினமும் சில இடங்களில் மழை பெய்தது. மேலும் இனி வரும் காலங்களில் ஒரு சில இடங்களில் கோடை மழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Advertisement