For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அக்னி நட்சத்திரம் 2024: எந்தெந்த சுபகாரியம் செய்யலாம்? எவற்றையெல்லாம் தவிர்க்கலாம்?

05:30 AM Apr 30, 2024 IST | Baskar
அக்னி நட்சத்திரம் 2024  எந்தெந்த சுபகாரியம் செய்யலாம்  எவற்றையெல்லாம் தவிர்க்கலாம்
Advertisement

Agni natchathiram 2024: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 20 நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் உள்ளது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கிறது.

Advertisement

பொதுவாக கத்திரி வெயில் அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஏற்படும். அக்னி நட்சத்திரத்தின்போது வெயில் உச்சத்தை தொடும். இந்நிலையில், மே மாதம் அக்னி நட்சித்திரத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, வரும் மே 1 முதல் 4 ஆம் தேதி வரை வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21 ஆம் தேதி தொடங்கி வைகாசி 15-ல் முடிவடையும். அதேபோல் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம், மே 4 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் சூரிய ஒளி நேரடியாக பூமி மீது விழும். அதனால் வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோதிடத்தின் கணிப்பின் படி சூரிய பகவான் சித்திரை மாதம் மேஷம் ராசியில் நுழைகிறார். அதன் காரணமாகவே சூரியனின் கதிர்கள் நம்மைச் சுட்டெரிக்கிறது.பொதுவாக கார்த்திகை நட்சத்திரம் அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது. கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதையாக விளங்கும் அக்னி தேவன் இந்த காலகட்டத்தில் வெப்பத்தைக் கக்குவதால் இது அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது.

அக்னி நட்சத்திரத்தின்போது என்ன செய்யக்கூடாது: அக்னி நட்சத்திர காலத்தில் புது வீடு குடி புகுதல், பால் காய்ச்சுதல், பூமி பூஜை செய்தால், காது குத்துதல், முடி இறக்குதல், மரம் வெட்டுதல், கிணறு வெட்டுதல், விதை விதைத்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்யக்கூடாது. அதேபோல் நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு பணிகள் செய்யக்கூடாது. மேலும் வாகனங்களில் நெடுந்தூர பயணம் செய்யக் கூடாது. இந்த அக்னி நட்சத்திர காலத்தில் நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், சீமந்தம், திருமணம் போன்ற காரியங்கள் செய்யலாம், சுப நிகழ்ச்சிகள் குறித்து பேச்சு வார்த்தையும் நடத்தலாம், அதற்கான ஏற்பாடுகளும் செய்யலாம்.

Read More: திருமணத்திற்கு முன்பு லிவிங்கில் இருக்க ஆசை! விருப்பம் தெரிவித்த பாரதி கண்ணம்மா ரோஷினி!

Tags :
Advertisement