முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

TRB முக்கிய அறிவிப்பு...! விண்ணப்பங்களை திருத்த செய்ய மீண்டும் கால அவகாசம்...!

05:30 AM Jan 13, 2024 IST | 1newsnationuser2
Advertisement

வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொள்ள கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை.

Advertisement

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் 33 காலி பணியிடங்களுக்கான அறிவிக்கை 05.06.2023 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் 12.7.2023 வரை தேர்விற்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. Online மூலம் விண்ணப்பித்தவர்கள் 42,716 பேர். அதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR (Optical Mark Reader) வழியில் 10.09.2023 அன்று நடத்தப்பட்டதில் 35,403 பேர் தேர்வு எழுதினார்கள்.

விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 13.07.2023 முதல் 17.07.2023 வரை திருத்தம் செய்ய (Edit Option) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலருக்கான ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR (Optical Mark Reader) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 09.11.2023 அன்று வெளியிடப்பட்டன.

பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள்/ ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்கு 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி 14.12.2023 (50 பணிநாடுநர்கள்) மற்றும் 04.01.2024 அன்று (ஒரு பணிநாடுநர்) சான்றிதழ் சரிபார்ப்பிற்கு மொத்தம் 51 பணிநாடுனர்கள் அழைக்கப்பட்டனர்.

வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவடைந்து 33 இனச் சுழற்சிகளுக்கான பணிநாடுநர்களின் தற்காலிகத் தெரிவுப் பட்டியல் (Provisional Selection List) 12.01.2024 அன்று வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
applicationCorrectiononline applicationtrbtrb exam
Advertisement
Next Article