For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் ஜெயம் ரவி விலகலா? ஜெயம் ரவிக்கு பதில் நடிக்க இருக்கும் பிரபலம் யார்...

11:04 AM May 09, 2024 IST | shyamala
மீண்டும் ஜெயம் ரவி விலகலா  ஜெயம் ரவிக்கு பதில் நடிக்க இருக்கும் பிரபலம் யார்
Advertisement

தக்லைப் படத்தில் நடிக்கவிருந்த நடிகர் ஜெயம் ரவி அப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன், நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'. இந்த படம் 'ஆக்ஷன்' படம் ஆகும். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில்,  நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்கின்றனர். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

Advertisement

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில், 3 வேடங்களில் நடிக்கும் கமல், முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், இப்படத்தில் கமிட்டாகி இருந்த ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் கால்சீட் பிரச்சினையால் வெளியேறி விட்டதாக ஏற்கனவே, தகவல் வெளியானது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களை படத்தில் இணைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் அசோக் செல்வன் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, 'தக்லைப்' படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியது உறுதியாகியுள்ளது.

மேலும், இந்த படத்தில் கமலுடன் நடிகர் சிம்பு, அசோக் செல்வன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Kopi Luwak: விலங்குகளின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் காபி!… இதுதான் உலகின் விலை உயர்ந்ததாம்!

Tags :
Advertisement