47 வயதில் மீண்டும்..!! சினிமாவில் களமிறங்கும் ரம்பா..!! குஷியில் ரசிகர்கள்..!!
90-களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் கார்த்திக் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான "உள்ளத்தை அள்ளித்தா" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இவர், கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரம்பா, நான் சினிமாவை தொடர்ந்து கவனித்து கொண்டு தான் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது சினிமாவில் டிரெண்ட்டுக்காக நிறைய மாறியிருக்கிறது. ஆனால், சினிமா மாறவில்லை. என்னுடைய வயதுக்கேற்ற வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் என்று ரம்பா கூறியுள்ளார்.