முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மீண்டும், மீண்டுமா…! ஆரஞ்சு அலர்ட்…! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

02:35 PM Dec 15, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

தமிழகம் மற்றும் புதுவைக்கு அடுத்த 2 நாடுகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பருவ மாற்றம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கன முதல் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நாட்களில் 115மி.மீ முதல் 205மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நாளை தமிகத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு டிசம்பர் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளைய தினம் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் டிசம்பர் 17ஆம் தேதியை பொறுத்தவரை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், அதே போல் விழுப்புரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
orange laertRain Updateஆரஞ்சு அலர்ட்
Advertisement
Next Article