T20 உலகக் கோப்பை 2026-ல் இந்திய அணியை வழிநடத்தும் புதிய கேப்டன் யார்? - வெளியான புதிய அப்டேட்!!
ரோகித் ஷர்மாவிற்கு பிறகு T20 உலகக் கோப்பை 2026-ல் இந்திய அணியை வழிநடத்தும் அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் விராட் கோலி, அக்சர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி பெற்றுள்ளது. இதன் மூலம் 13 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியது.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். 2024 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. அதன் முடிவில் இரண்டு இந்திய ஜாம்பவான்கள் ஓய்வை அறிவித்து உள்ளனர். மேலும், டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தான் தொடர்ந்து விளையாடுவேன் என ரோகித் ஷர்மா அறிவித்தார்.
இந்நிலையில், ரோகித் ஷர்மாவிற்கு பிறகு இந்திய அணியை வழிநடத்தும் அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்படும் வீரர் பற்றிய கேள்வி தற்போது எழுந்துள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை இலங்கை நடத்துகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கான கேப்டன்களின் பட்டியலில் ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா:
டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த சில தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆதலால், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜஸ்ப்ரித் பும்ரா:
இந்திய கிரிக்கெட்டின் மகுடமான ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு கேப்டனாகக் கூடிய அனைத்து தகுதிகளும் உள்ளது. ஏற்கனவே சில டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். பல போட்டிகளில் ஆட்டநாயகன் விருதும், பல தொடர்களில் தொடர் நாயகன் விருதும் வென்றுள்ளார்.
சூர்யகுமார் யாதவ்:
சூர்யகுமார் யாதவ் பெயரும் டி20 உலகக் கோப்பை தொடர் கேப்டனுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளது. அமைதியான ஒரு கேப்டனை தேர்வு செய்ய விரும்பினால், அதற்கு சூர்யகுமார் யாதவை பரிசீலினை செய்யலாம். ஒரு சில தொடர்களில் கேப்டனாகவும் தனது சிறப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரிஷப் பண்ட்:
ஒரு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனை கேப்டனாக தேர்வு செய்ய விரும்பினால், அதற்கு சிறந்த தேர்வாக ரிஷப் பண்ட் இருப்பார். ஐபிஎல் தொடர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; பால் விவசாயிகளுக்கு ரூ.3 ஊக்கத்தொகை…! அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்…!