பத்திரப்பதிவு ஆவணத்தில் எழுத்து பிழையா? ஈஸியா மாற்றலாம்.. எப்படி தெரியுமா..?
பத்திரப்பதிவு செய்யும்போது பலரும், பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்களைச் சரிவர படிக்கமாட்டார்கள். வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்தும் முழுமையாகப் படிக்காமல் விட்டுவிடுவார்கள். பத்திரப்பதிவு அலுவலம் சென்று, ஆவணத்தைப் பதிவு செய்து வந்த பிறகு, அதில் பிழை இருப்பதைக் கண்டுபிடிப்பார்கள். ஆவணங்களில் பிழை இருந்தால், பத்திரப்பதிவுக்குப் பிறகு சரி செய்ய முடியுமா?
பத்திரப்பதிவு என்பது வீடோ, மனையோ நமக்குச் சொந்தம் என்பதைக் காட்டும் ஆவணம். அந்த ஆவணத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எந்தப் பிழையும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். தட்டச்சு செய்யும்போதோ பிழை ஏற்படுவது சகஜமே. இப்படிப் பத்திரப்பதிவு ஆவணத்தில் பிழை இருந்து, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பின்னாளில் பெரும் பிரச்சினையாகிவிடும்.
பெயர், தந்தை பெயர், விலாசம், மனையின் விவரங்கள், தொகை போன்ற ஏதாவது விவரம் தவறாக இருந்தால்., பிற்காலத்தில் சொத்தை விற்கும்போதோ, பெயர் மாற்றம் செய்யும்போதோ பெரும் சிக்கலாகிவிடும். சிறு பிழையைக் காரணம் காட்டி சொத்து நமக்கு உரியது அல்ல என்று பேசும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கிவிடும்.
பெயரில் திருத்தம் செய்ய வேண்டுமானால், சார் பதிவாளர் அலுவலகத்தில்தான் செய்ய முடியும்.. விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி தரும் அதே நபராலேயே, இந்த பிழை திருத்தமும் செய்யப்படும். இப்படி பிழையும் திருத்தப்பட்டு, நம்மிடம் ஒப்படைக்கும் ஆவணத்தின் பெயர்தான், "பிழை திருத்தல் பத்திரம்" (Rectification Deed) என்பார்கள்.
பத்திரப்பதிவு: திருத்தப்பட்ட சொத்து ஆவணத்தில், பிழை என்ன என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.. பத்திரம் பதிவு செய்யும் முன்பு, தெரு பெயர், விற்பவரின் தந்தை பெயர், முகவரியை மீண்டும் ஒருமுறை படித்து பார்க்க வேண்டும். பரப்பளவு, பெயர் உள்ளிட்டவற்றில் வேறுபாடு இருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இந்த ஆவணம் மூலமே பிழைகளை சரி செய்ய முடியும். அப்படி பிழைகளைத் திருத்தும் ஆவணத்தையும் பதிவு செய்ய வேண்டும். பெயர், முகவரி போன்றவற்றில் கவனக்குறைவால் ஏற்படும் பிழைகள் என்றால் அவற்றை திருத்தி பதிவு செய்யும்போது, அதற்கென கட்டணங்கள் எதுவும் வசூலிக்கமாட்டார்கள். அதாவது சொத்து விவரமும், நீங்கள் வாங்கும் பட்டாவும் ஒரே மாதிரி இருக்காது...
ஆனால், சிலர் தாய் பத்திரத்தில் உள்ள சர்வே எண்ணை தவறாக குறிப்பிட்டுவிடுவார்கள். மனையின் நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் போன்ற தகவல்கள் தாய்ப் பத்திரத்தில் இருப்பதுபோலவே இருந்தால், பிழை திருத்தம் செய்வதற்கு ரூ. 300 வரை செலவாகக்கூடும்.
இனிஷியலையும் பத்திரத்தில் சரியாக குறிப்பிட வேண்டும்.. ஆதார் கார்டு, பான் கார்டு, மார்க் ஷீட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில், உங்கள் சரியான இனிஷியல் உள்ள அனைத்தையும் சார்பதிவாளர் காட்டி, இதில் எதை வேண்டுமானாலும் ஆவணத்தோடு இணைத்துக்கொள்ள சொல்லிவிடலாம். உடனே அவரும், நீங்கள் எழுதும் இனிஷியலுடன், சொத்து ஆவணத்தை பதிவு செய்து தருவார்.
Read more : காலம் மாறும்… ஆணவத்தில் ஆடும் அமைச்சர் சேகர் பாபு…! 2026-ல் மக்கள் பதில் சொல்வார்கள்…!