ஜம்மு காஷ்மீரில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Jammu and Kashmir: சுமார் 7 ஆண்டுகள் 4 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பாஜக அரசாங்கத்தால் கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, லடாக் இந்த பிராந்தியத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2019 அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்து வந்தது.
இந்தநிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீரின் அடுத்த முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்கவுள்ளார். அதன்படி, சுமார் 7 ஆண்டுகள் 4 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவது தொடர்பான அக்டோபர் 31, 2019 தேதியிட்ட முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகாலமாக செயல்பாட்டில் இருந்த உத்தரவை ரத்து செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்றியதன் மூலம், உமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசு, வரும் வாரத்தில் பதவியேற்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் கிடைத்துள்ளது.
Readmore: அதிர்ச்சி!. சர்க்கரை நோய் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா?. நிபுணர்கள் கூறுவது என்ன?