முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

4 ஆண்டுகளுக்கு பிறகு தயாநிதி மாறன் மீது பாய்ந்தது வழக்கு..!! என்ன சம்பவத்திற்காக தெரியுமா..?

After about 4 years, the Chennai Central Crime Branch police have now registered a case against Dayanidhi Maran under the Prevention of Atrocities Act.
10:23 AM Jul 24, 2024 IST | Chella
Advertisement

மத்திய சென்னை மக்களவை உறுப்பினராகவும், திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளராகவும் இருப்பவர் தயாநிதி மாறன். இவர், 2 முறை மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, அப்போதைய தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்திக்க திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சென்றனர்.

Advertisement

இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலாளர் தங்களை அவமரியாதையுடன் நடத்தியதாக திமுக எம்பிக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், ”தலைமைச் செயலாளர் தங்களை 3ஆம் தர மக்களை போல நடத்தினார் என்றும் நாங்கள் எல்லாம் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்றும் கேள்வி எழுப்பினார். எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் நடந்துகொண்டார் என்றும் குற்றம்சாட்டினார்.

அதே சமயம் நாங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களா என தயாநிதி மாறன் கூறியது சர்ச்சைகளை உண்டாக்கியது. இதற்கு அப்போது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தயாநிதி மாறன் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. சுமார் 4 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, தயாநிதி மாறன் பேச்சு பட்டியலின மக்களை புண்படுத்திவிட்டதால் கோவை உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் சம்பவ இடம் சென்னை என்பதால், கோவையில் இருந்து சென்னை குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனை அழைத்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தனது பேச்சுக்கு அப்போதே வருத்தம் தெரிவித்த தயாநிதி மாறன், “தலைமை செயலாளர் திமுக எம்.பி.க்களை தாழ்வான முறையில் நடத்தினார் என்ற அர்த்தத்தில்தான் கூறியிருந்தேனே தவிர யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் சொல்லவில்லை. யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

Read More : திருமணமான மூன்றே நிமிடத்தில் விவகாரத்து..!! மணப்பெண்ணை அதிரவைத்த மாப்பிள்ளை..!! நடந்தது என்ன..?

Tags :
காவல்துறைதயாநிதி மாறன்வழக்குப்பதிவு
Advertisement
Next Article