முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2024-க்கு பின் நாம் தமிழர் கட்சி இருக்காது..!! சீமானை எச்சரிக்கும் அண்ணாமலை..!!

11:54 AM Feb 05, 2024 IST | 1newsnationuser6
Advertisement

2024ஆம் ஆண்டுக்கு பின் சீமானின் நாம் தமிழர் கட்சியே இருக்காது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், ”நாம் தமிழரை விட 1% கூடுதல் வாக்குகளை பாஜக வாங்க முடியுமா? என சீமான் விடுத்திருக்கும் சவாலை ஏற்க தயார். 1% என்ன 30% கூடுதலாகவே வாக்குகளை வாங்கி காட்டுவோம். நாம் தமிழர் கட்சி 2024-க்கு பின் இருக்காது. எத்தனை நாளைக்கு வெறுப்பை விதைத்து ஒரு கட்சியை நடத்த முடியும்? இளைஞர்களிடம் வெறுப்பைதான் நாம் தமிழர் கட்சி விதைக்கிறது.

அதாவது நாம் தமிழர் கட்சியால் என்ன செய்ய முடியும்? நாம் தமிழர் கட்சியா? மத்தியில் ஆட்சியில் இருக்கிறது? நாம் தமிழர் கட்சியா? மாநிலத்தில் ஆட்சிக்கு வரப் போறாங்க? அவர்களுக்கு கொள்கைகளே இல்லை. சீமானுடன் யாரும் போனாங்களா? அவங்க கூட கட்சியே இல்லையே? தனியா சீமான் நிற்பது பெரிய கொள்கையாக பார்க்காதீங்க. யாருமே சேர்த்துக்கல. தேர்தல் என வரும் போது மக்கள் யார் ஆட்சிக்கு வருகிறார்கள்? என்றுதான் பார்ப்பாங்க. யார் மத்தியில் ஆட்சிக்கு வருவாங்க? மாநிலத்தில் ஆட்சிக்கு வருவாங்க? என்றுதான் மக்கள் பார்ப்பார்கள்” என்று கூறினார்.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு சீமான் அளித்துள்ள பதிலில், ”நாம் தமிழர் கட்சிக்கு 7% வாக்குகள் இருக்கிறது. எங்களைவிட 30% வாக்குகள் கூடுதலாக பாஜக பெறும் என்கிறார் அண்ணாமலை. அதாவது 37% வாக்குகள் பெற முடியும் என்றால் அண்ணா திமுகவுடன் பாஜகவுக்கு கூட்டணி தேவை இல்லையே? 37% பெற முடியும் என்றால் தனித்து நின்றே ஆட்சி அமைக்கலாமே எதற்கு கூட்டணி?

வெறுப்பின் விதை வேர், செடி, பூ, காய் அத்தனையுமே பாஜகதான். நாம் தமிழர் அல்ல. நான் முன்வைக்கும் மொழி, இன அரசியல் வெறுப்பு எனில் ஏன் மொழி வழி மாநிலங்களை பிரித்தீர்கள்? எல்லா நாடுகளிலும் மொழிவழி தேசிய இனங்கள்தான். 2024 தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறும். பிறகு யார் இருப்பார்கள்? என பார்ப்போம்” என்று சவால் விடுத்தார்.

Tags :
திமுகநாம் தமிழர் கட்சிபாஜக தலைவர் அண்ணாமலை
Advertisement
Next Article