100 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி உத்திரம், ஹோலி பண்டிகை நாளில் நிகழும் சந்திர கிரகணம்..!! இந்தியாவில் பார்க்க முடியுமா..?
இந்த ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் வருகிற மார்ச் 25ஆம் தேதி அதாவது பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை நாளில் நிகழப் போகிறது. வேத ஜோதிட சாஸ்திரப்படி, 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலி பண்டிகை, பங்குனி உத்திரம் நாளில் சந்திர கிரகணம் நிகழ்வது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த சந்திர கிரகணமானது காலை 10.23 மணிக்கு தொடங்கி மாலை 03.02 மணி வரை நீடிக்கும். முன்னதாக இந்த சந்திர கிரகணம் 1924ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணமாக இருக்கும். இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும். ஹோலி மற்றும் சந்திர கிரகணம் இரண்டும் ஒரே நாளில் ஏற்பட உள்ளதால், அதன் பலன் சில ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும்.
இந்த சந்திர கிரகணத்தை உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள மக்கள் பார்க்க முடியும். ஐரோப்பா, வடக்கு/கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்த நிகழ்வை பார்க்கலாம். இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பகல் நேரத்தில் நிகழ்வாதால் இந்தியாவில் இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. எனினும் 2024ஆம் ஆண்டின் 2-வது சந்திர கிரகணம் அக்டோபர் 29ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : Lok Sabha | விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை களமிறக்கும் பாஜக..? பிளான் போட்ட அண்ணாமலை..!!