முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோட்...! இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் இடத்தில் பேருந்தை நிறுத்த உத்தரவு...!

After 10 pm, the bus is ordered to stop at the place where passengers ask for it
05:55 AM Sep 12, 2024 IST | Vignesh
Advertisement

திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் அனைத்து தொலைதூர புறநகர் பேருந்துகளும் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் நிறுத்தத்தில் நிறுத்திச் செல்ல தடத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தி பொது மேலாளர் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் நகரப் பேருந்து வசதி இல்லாத நேரமான இரவு நேரங்களில் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கோரும்பட்சத்தில் இறக்க வேண்டிய நிறுத்தத்தின் பாதுகாப்பினை அறிந்து, அதற்கேற்ப அவர்களை இறக்கிவிட்டுச் செல்லுமாறு இதுபோன்ற புகார்கள் எழாவண்ணம் பணிபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் அனைத்து தொலைதூர புறநகர் பேருந்துகளும் இரவு 10.00 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் நிறுத்தத்தில் நிறுத்திச் செல்ல தடத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் புகார்வராவண்ணம் பணிபுரிய இதில் கிளை மேலாளர்கள் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பயணிகளிடமிருந்து புகார் பெறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறைசார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இச்சுற்றறிக்கையை அனைத்து ஓட்டுநர்/நடத்துநர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டியும், தகவல் நோட்டில் கையொப்பம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Bus stopNight traveltn governmentTNSTC
Advertisement
Next Article