Afghanistan | பயங்கர நிலச்சரிவு..!! 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து 25 பேர் பலி..!! மீட்புப் பணிகள் தீவிரம்..!!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
Afghanistan | ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. கிழக்கு ஆப்கான் பகுதியில் உள்ள நூர்காரத் பகுதியில் மொகானி கிராமத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் எதிரொலியாக நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணம், பெரும்பாலும் மலை மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary : 25 Killed, 8 Injured In Afghanistan Landslide Caused By Snowfall