முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காய்ச்சல் பாதிப்பு..!! மருத்துவர் ஆலோசனையின்றி வீட்டில் சிகிச்சையா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!!

08:05 AM Jan 26, 2024 IST | 1newsnationuser6
Advertisement

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியுதவியின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் கண் அறுவை சிகிச்சை அரங்கத்தையும், எச்பிசிஎல் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திருவொற்றியூர் பகுதி மக்கள் கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வசதியாக இந்த மருத்துவமனையில் புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் பணியில் உள்ளதால், காலிப்பணியிடங்கள் இல்லை. இருப்பினும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் கூடுதலான மருத்துவர்கள் இங்கு நியமிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இறப்புகளைப் பொறுத்தவரை மிகவும் குறைவு. குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்போது, மருத்துவமனைக்கு வராமல், மருத்துவ ஆலோசனை பெறாமல் வீட்டிலேயே சிகிச்சை பெறுவதால்தான் இறப்புகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே, குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவ ஆலோசனை பெறாமல் வீடுகளில் சிகிச்சை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Tags :
அமைச்சர் மா.சுப்பிரமணியன்காய்ச்சல் பாதிப்புசென்னைமருத்துவர் ஆலோசனை
Advertisement
Next Article