For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை.." "மக்கள் தான் நம்பிக்கை " - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.!

02:53 PM Feb 11, 2024 IST | 1newsnationuser7
 பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை     மக்கள் தான் நம்பிக்கை     அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சி மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது .

Advertisement

2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலிலும் 2021 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிட்டன. இந்த இரண்டு தேர்தல்களிலும் அந்த கட்சிக்கு படுதோல்வியே கிடைத்தது. மேலும் தமிழகத்தில் பாஜகவின் தலைவராக பொறுப்பேற்று அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வந்தார். இது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி பாஜக உடனான அதிமுக கட்சியின் கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்தார். மேலும் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுகவிற்கு கூட்டணி கதவுகள் திறந்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி இறுதியில் பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்தும் நிலவி வந்தது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்ட வட்டமாக அறிவித்திருக்கிறார். தொடர்பாக பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சியுடன் இனி ஒரு போதும் கூட்டணி இல்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். திமுக போன்ற கட்சிகள் கூட்டணியை நம்பி தேர்தலை சந்திப்பதாக தெரிவித்தார். மேலும் அதிமுக என்றும் மக்களை நம்பி களம் காணும் கட்சி எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement