நெருக்கடியில் அதிமுக..!! "கட்சி தாவும் முன்னாள் எம்எல்ஏ.." ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைய திட்டம்.!
பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது. அதிமுக கட்சி கடந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. கட்சி உறுப்பினர்களிடம் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து பாஜக உடனான கூட்டணியை முடித்துக் கொண்டதாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
வர இருக்கின்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க கட்சி நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கே.வடிவேல் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தீவிரவா எம்ஜிஆர் ரசிகரான இவர் அதிமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார்.
1977 மற்றும் 84 வருடங்களில் கரூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் வடிவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் ஐக்கியமாக இருக்கிறார். இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.