For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"விடியா அரசின் கோமா நிலை.." மக்களுக்காக போராடும் அதிமுக..!! இறங்கி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.!

06:56 PM Feb 11, 2024 IST | 1newsnationuser7
 விடியா அரசின் கோமா நிலை    மக்களுக்காக போராடும் அதிமுக     இறங்கி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி
Advertisement

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியிலும் பரபரப்பாக இயங்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுக வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக மும்முறமாக இயங்கி வருகிறது. தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு போன்ற பணிகளைத் தவிர ஆளும் கட்சியின் குறைகளை மக்களிடம் தெரிவிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார் அதிமுகவின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி..

Advertisement

மாநில அரசியல் நடக்கும் குறைகளை மட்டுமல்லாமல் நகராட்சி மற்றும் உள்ளாட்சி என அனைத்து துறைகளிலும் இறங்கி அடிக்க கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மக்கள் பொது பிரச்சனை தொடர்பாக போராட்ட அறிவிப்பு அதிமுக கட்சியால் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் விடியா திமுக அரசு அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை பாரபட்சமான முறையில் செயல்படுத்தாமல் முடக்கி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலைகள் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டங்களை விடிய அரசு செயல்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளது. இதனால் திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். சாலைகள் முறையற்ற வகையில் பராமரிக்கப்படாமலும் மாசு அதிகரித்து இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு காச நோய் போன்றவை ஏற்படும் அபாய நிலையில் ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால் அனைத்து சாலைகளும் சேதம் அடைந்து இருக்கிறது இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. இது போன்ற விடிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை 16 ஆம் தேதி திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவின் எம்பி சிவி சண்முகம் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் மக்களின் நலனில் அக்கறை உள்ள கட்சி அதிமுக என்பதை நிரூபித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். எதிர் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பிரச்சினைகளை அதிமுக கையில் எடுத்திருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது .

Tags :
Advertisement