For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாராளுமன்றத் தேர்தல் 2024: அதிமுக வேட்பாளர்கள் விருப்ப மனு.! எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

10:36 AM Feb 19, 2024 IST | 1newsnationuser4
பாராளுமன்றத் தேர்தல் 2024  அதிமுக வேட்பாளர்கள் விருப்ப மனு   எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement

வருகின்ற பாராளுமன்றத் தேர்தல்(parliamentary elections) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் வருகின்ற மார்ச் முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன .

Advertisement

தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக கடந்த தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது . இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. தொண்டர்களின் அதிருப்தியை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியுடன் ஆன உறவை முடித்துக் கொள்வதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். மேலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் தனி கூட்டணி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பாக தேர்தல் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. அதிமுக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேமுதிக போன்ற மாநில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது . இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளுக்கான அதிமுக கட்சியினரின் விருப்பம் மனு குறித்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழகத்தின் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்பும் அதிமுக நிர்வாகிகள் தங்களது விருப்பம் மனுவை பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்திருக்கிறார். மேலும் விருப்பமுனை பெறுவதற்கு ரூ.20,000/- கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறித்த கட்டணத்தை செலுத்தி விருப்பமானவை பூர்த்தி செய்து மேற்குறிப்பிட்ட தேதிகளுக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: ADMK General secretary Edappadi Palanisamy officially announces the dates for candidate's wish list of parliamentary election 2024

Tags :
Advertisement