முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Admission | தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முன்கூட்டியே தொடங்கும் மாணவர் சேர்க்கை..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

02:17 PM Feb 28, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்றவை வழங்கப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பின் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில், 2024-25ஆம் கல்வியாண்டு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட இருக்கிறது. அதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முன்னதாகவே மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

English Summary : Admission of Tamil Nadu Government Schools

Read More : Himachal | ஆட்சி கவிழும் அபாயம்..!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சுக்வீந்தர் சிங்..!!

Advertisement
Next Article