முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போதே அட்ஜஸ்ட்மென்ட்’..!! பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்..!! போட்டுடைத்த நடிகை..!!

Actress and co-director Devaki Bagi said she was sexually harassed by a director and assistant director in Malayalam cinema as a schoolgirl.
04:12 PM Sep 10, 2024 IST | Chella
Advertisement

பள்ளி மாணவியாக இருந்தபோது மலையாள சினிமாவில் இயக்குனர், உதவி இயக்குனரிடம் இருந்து பாலியல் துன்புறுத்தல் அனுபவித்ததாக நடிகையும், இணை இயக்குனருமான தேவகி பாகி கூறினார்.

Advertisement

மலையாள சினிமாவில் இணை இயக்குனராக இருப்பவர் தேவகி பாகி. இந்நிலையில், கோழிக்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், மலையாள சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அப்போது ஒரு உதவி டைரக்டர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அது எனக்கு மிகவும் வேதனை தந்தது. 7ஆம் படிக்கும் ஒரு சிறுமியிடம் கூட இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால், சினிமாவில் உள்ளவர்களில் சிலர் எந்த அளவுக்கு மோசமான மனதுடன் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிறகு, 11ஆம் வகுப்பு படிக்கும்போது, மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அப்போது அந்தப் படத்தின் இயக்குனர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். நான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது, சினிமாவில் இதெல்லாம் சகஜம்தான் என்றும், நடிகைகள் அனைவருமே இதைக் கடந்து தான் வந்திருக்கிறார்கள் என்றும் என்னிடம் கூறினார். உடனடியாக நான் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று கூறி படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியேறி விட்டேன்.

பிறகு பலமுறை என்னை தொடர்பு கொண்டு நடிக்க வருமாறு அந்த டைரக்டர் அழைத்தார். ஆனால், நான் வர முடியாது என்று கூறி விட்டேன். பிறகு பல ஆண்டுகள் கழித்து நான் ஆபாசம் என்ற படத்தில் நடித்த சில இளம் நடிகைகளிடம் பேசியபோது, இப்போதும் சினிமாவில் அது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொண்டேன். நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொன்னால்தான் இதில் இருந்து அனைவரும் தப்பிக்க முடியும்” என்றார்.

Read More : யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை..!! 15 வயது சிறுவன் பரிதாப மரணம்..!! தலைமறைவான போலி டாக்டர்..!!

Tags :
பள்ளி மாணவிபாலியல் தொல்லைமலையாள சினிமா
Advertisement
Next Article