For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!

12:32 PM Nov 24, 2023 IST | 1Newsnation_Admin
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement

நடிகை த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசிய வழக்கில், முன் ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம் பேசுபொருளானதை அடுத்து பல்வேறு தரப்பிலிருந்து அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. மேலும் இந்த விவகாரம் குறித்து நேற்றைய தினம் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேரில் ஆஜாராகி தன்னுடைய விளக்கத்தையும் தெரிவித்திருந்தார் மன்சூர் அலிகான்.

மேலும் இந்த விவகாரம் குறித்து சென்னை நீதிமன்றத்தில் முன் ஜாமுன் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவாதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டது, இதனைத்தொடர்ந்து மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனு தொடர்பான வழக்கை நீதிபதி அல்லி தள்ளி வைத்துள்ளார்.

இன்றைய தினம் நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு தொடர்பாக நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை முன்னதாக வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், " ”ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்! எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்கானோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.

காவல் அதிகாரி அம்மையார் த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்துவிட்டேன். யதார்த்த நிலை ஜனநாயகத்தின் 4-வது தூண் ஊடகம்,. மணிப்பூர், ஹத்ரஸ், பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன்கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது. எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!

பெண்ணில் இருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றர் நபிகளார். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8′ வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10ஆம் வகுப்பு வரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்" என மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement