புதிய சேமிப்புத் திட்டத்தை வெளியிடும் 'ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஹவுஸ்'!
ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் ஜூன் 12 அன்று ஆதித்யா பிர்லா சன் லைஃப் குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபண்டில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம், என்ன வகை ஃபண்ட் என்பதைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.
ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் குவாண்ட்-அடிப்படையிலான முதலீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து, திறந்தநிலை ஈக்விட்டி கருப்பொருள் நிதித் திட்டமான ஆதித்யா பிர்லா சன் லைஃப் குவாண்ட் ஃபண்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் ஜூன் 24, 2024 அன்று நிறைவடையும். ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் இந்தத் திட்டம் தொடர்ச்சியான விற்பனை மற்றும் மறு வாங்குதலுக்காக மீண்டும் திறக்கப்படும்.
இதுகுறித்து, ஃபண்ட் ஹவுஸின் ஈக்விட்டி ஹெட் மற்றும் சிஐஓ ஹரீஸ் கிருஷ்ணன் கூறுகையில், ”பங்குச் சந்தை ஏற்ற, இறக்கங்கள் கணிக்க முடியாத நிலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் அதிக குழப்பங்களுக்கு ஆளாகி உள்ளனர். அதனால் திடீர் இழப்புகளை சமாளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டதுதான் இந்த ஈக்விட்டி சார்ந்த ஃபண்ட் ஆகும். இந்த திட்டம் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.
மேலும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யத் தேவையான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும். அதே நீங்கள் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்ய நினைத்தால் அதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எக்ஸிட் கட்டணம் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சம் ஆகும்.
Read more ; இந்த தவறை மட்டும் செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்..!! அதிர்ச்சி தகவல்..!!