முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வாவ்... அரசு கொடுக்கும் ரூ.2 லட்சம் வரை மானியம்...! என்னென்ன ஆவணங்கள் அவசியம்...! மிஸ் பண்ணிடாதீங்க...

06:29 AM Nov 12, 2023 IST | 1newsnationuser2
Advertisement

ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

மேற்படி, இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும். தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூ.2.00 இலட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5% வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தொழிலுக்கு ரூ.6.50 இலட்சம் முதல் ரூ.7.50 இலட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30% அல்லது அதிகபட்சம் ரூ.2.25 இலட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50% அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags :
housesubcidytn government
Advertisement
Next Article