For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஜய் முன்னிலையில் தவெக-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா..? அவரே கொடுத்த பரபரப்பு பேட்டி..!!

I will discuss my future plans and announce them soon. I am thinking about what to do rather than where I will join.
01:58 PM Dec 16, 2024 IST | Chella
விஜய் முன்னிலையில் தவெக வில் இணையும் ஆதவ் அர்ஜுனா    அவரே கொடுத்த பரபரப்பு பேட்டி
Advertisement

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்திருந்த பேட்டியில், "அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காதது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்து விட்டேன். என்னை யாரும் அழுத்தம் கொடுத்து இணங்க வைக்க முடியாது. ஆதவ் அர்ஜுன் 6 மாதத்திற்குப் பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இது போன்ற கருத்துக்களை கூறியுள்ளார். எங்கள் கட்சியின் நடைமுறையின் அடிப்படையில் தான் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.

Advertisement

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை விசிகவில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விசிக-வில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன். மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்” என்று அறிவித்தார். இந்நிலையில், விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தவெகவில் உள்ளதாக தகவல் வெளியானது.

இந்தச் சூழலில் தான், இன்று அதுபற்றிய கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா பதில் அளித்துள்ளார். "எதிர்கால திட்டம் குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன். எங்கு இணைகிறேன் என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசித்து வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், திருமாவளவன் என்றைக்குமே என் ஆசான். தலைவரின் வார்த்தைகளுக்கு நான் கட்டுப்படுவேன். அவர் சொன்ன அறிவுரைகளை எடுத்துக்கொண்டு பயணிப்பேன். புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதைச் சொன்னதற்காகத்தான் எனக்கு தண்டனை கிடைத்தது" எனத் தெரிவித்துள்ளார்.

Read More : ”அந்த ஆட்டுக்கும் இந்த ஆட்டுக்கும் தொடர்பு”..!! விஜய், அண்ணாமலையை வெச்சி செய்த திண்டுக்கல் லியோனி..!!

Tags :
Advertisement