முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடேங்கப்பா!… அயோத்திக்கு அதிகரித்த மவுசு!… நிலம் வாங்க போட்டா போட்டி!... 5 மடங்கு விலை உயர்வு!

09:34 AM Jan 09, 2024 IST | 1newsnationuser3
Advertisement

பிரமாண்ட ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தி நகரில் 2019ம் ஆண்டில் சதுர அடிக்கு ரூ.1000 முதல் ரூ.2000 இருந்த நிலத்தின் விலை தற்போது ரூ.4000 முதல் ரூ.6000 ஆக உயர்ந்துள்ளது

Advertisement

அயோத்தி ராமஜென்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதிக்கு பின்பு புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டு திறப்பதற்கு தயாராகியுள்ளது. ஜனவரி 22 ம் தேதி பிரதமர் மோடி ராமர் கோவிலை திறந்து வைக்கிறார். உத்தரபிரதேச அரசு, மத்திய அரசு மற்றும் பாஜகவினர் இது தொடர்பாக மேற்கொண்டு இருக்கும் பிரச்சாரச் செயல்களினால் அயோத்தி நகரம் உலகமெங்கும் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. அதனால் தற்போது அயோத்தி நகரில் குடியேறவும், வர்த்தக நிறுவனங்களை திறக்கவும், நட்சத்திர விடுதிகள் கட்டவும் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

அயோத்தியில் புதிய ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு சர்வதேச விமான நிலையம் மேம்படுத்தப்பட்ட புதிய ரயில் நிலையம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால் அந்த புனித நகருக்கு மேலும் மவுசு அதிகரித்துவிட்டது. அயோத்தியில் உள்ள நிலங்களின் விலை குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிகரித்துவிட்டது. உத்தர பிரதேச மாநிலத்தின் வேறு நகரங்களைக் காட்டிலும் அயோத்தியில் நிலம் வாங்குவதற்கு மக்களிடையே போட்டா போட்டி எழுந்துள்ளது.

பிரபலமாகிவருவதால், உள்ளூர் மக்களும், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அயோத்தியில் நிலத்தில் முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தாஜ், ரேடிசன் போன்ற நட்சத்திர ஓட்டல் நிறுவனங்களும் அயோத்தியில் நிலம் வாங்குவதற்கு மும்முரமாக உள்ளன. ராமர் கோயில் அமைந்துள்ள பகுதி மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் நிலத்தின் விலை அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டில் பைசாபாத் ரோடு பகுதியில் சதுர அடி ரூ.400 முதல் ரூ.700 வரை இருந்த நிலையில், 2023 அக்டோபரில் ரூ.1500 முதல் ரூ.3000 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் அயோத்தி நகரில் 2019ம் ஆண்டில் சதுர அடிக்கு ரூ.1000 முதல் ரூ.2000 இருந்த நிலத்தின் விலை இப்போது ரூ.4000 முதல் ரூ.6000 ஆக உயர்ந்துள்ளது. அயோத்தியில் ஜனவரி மாதத்தில் அபிநந்தன் லோதா ஹவுஸ் 25 ஏக்கர் பரப்பில் குடியிருப்பு கட்டுமானத்தை தொடங்குகிறது. மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள், அயோத்தியை உலகளவில் முக்கிய இடமாக ஆக்குவதற்கு உத்தரபிரதேச அரசு எடுத்துவரும் முயற்சிகளின் காரணமாகவும், அயோத்தியின் புனிதத் தன்மையினால் பலரும் இங்கு வந்து குடியேற விருப்பம் காட்டுவதால் முதலீட்டாளர்கள் இங்கு நிலத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கருதுவதாலும் இந்த அளவுக்கு நிலத்தின் மதிப்பு அங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
5 மடங்கு விலை உயர்வுayodhyaLandprice hikeஅயோத்திநிலம் வாங்க போட்டா போட்டி
Advertisement
Next Article